குழந்தைகளோடு கொண்டாட்டம் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் "சமத்துவ பொங்கல்"!!

குழந்தைகளோடு கொண்டாட்டம் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் "சமத்துவ பொங்கல்"!!

தமிழர்கள் காலந்தோறும் பாரம்பரியமாகவும், தமிழனை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டும் ஒரு விழாவாகவும், தமிழர்களுக்கான ஒரு விழாவாகவும், தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் திருவிழா. 

Advertisement

அந்த வகையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி சோமரசம்பேட்டை அம்பேத்கர் காலனியில் சமத்துவ பொங்கல் விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் அப்பகுதி மக்களோடு இணைந்து அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் 40க்கு மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில் கோலப்போட்டி, சாக்கு ஓட்டப் போட்டி, பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, பலூன் உடைத்தல், மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கியும், கலந்து கொண்டஅனைத்து குழந்தைகளுக்கும் உற்சாக பரிசுகள் வழங்கினர்.

மேலும் வரலாற்றுத் துறையின் மாணவ, மாணவிகள் நடனமாடியும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும் விழாவினை கலைகட்ட செய்தனர். மேலும் சுடச்சுட பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.india.thefoodiee

Advertisement

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் ஆசிரியர் (ஓய்வு) ஜோதி சுந்தர்சிங், வரலாற்று துறை தலைவர் ஃபெமிளா அலெக்சாண்டர், ஆசிரியர்கள் மற்றும் வரலாற்றுத் துறை மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a