ஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்த 500+ ஊழியர்கள்

ஊரடங்கில் நீங்களும் ஹீரோ தான் - திருச்சியில் 7000+ ஆன்லைன் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்த 500+ ஊழியர்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

Advertisement

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத காரணத்தாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு 20.04.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

236 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் முன் களப்பணியாளர்கள் திருமணத்திற்கு செல்வோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

அந்த வகையில் திருச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் ஸ்விகி, சொமேட்டோ உட்பட தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 7000 ஆர்டர்கள் பெறப்பட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று பணியில் இருந்தனர். ஊரடங்கு காரணமாக முன்னெச்சரிக்கையாக அன்றாட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தவர்களும், திருச்சி விடுதிகளில் தங்கி இருக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று திருச்சியில் ஆன்லைன் உணவை ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டனர். 

மேலும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு திருச்சி மாநகர காவல் துறை சார்பாக அனைத்து இடங்களிலும் ஒத்துழைப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF