பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !! ரூபாய் ஆராயிரத்தை ரெடியாக வைத்துக்கொள்ளவும்...
ஆதார் - பான் இணைப்பு மற்றும் பான் கார்டு, ஆதார் கார்டு.. மிக முக்கியமான ஆவணங்களாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதற்கான காலக்கெடுவும் முடிந்து விட்டது. ஜூன் 30ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்திருப்பவர்கள் பான் கார்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.
ஒருவர் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால் அது செல்லாது. அப்படிப்பட்ட பான் கார்டுகள் இருந்தாலும் இல்லை என்பது போலத்தான் இருக்கும். இது போன்ற பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அந்த அட்டையால் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்றே கூறவேண்டும். செயலற்ற பான் கார்டக் வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம். பான் கார்டு இல்லாமல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதியோடு முடிந்துவிட்டது. இனி பான் கார்டு இல்லாமல் வருமான வரித்தாக்கல் செய்வது கடினம். ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும். இப்போது அபராதத்தைச் செலுத்திய பிறகு, பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க விரும்பினால், பான் கார்டை மீண்டும் செயல்படுத்த 30 நாட்கள் ஆகும்.
இப்போது பான் கார்டை இணைக்க நீங்கள் ரூபாய். 1000 அபராதம் செலுத்த வேண்டும். பின்னர்தான் ஆதார் அட்டையுடன் இணைக்கலாம். மேலும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரூபாய் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.
அதாவது உங்கள் பான் கார்டு செயலிழந்தால் நீங்கள் மொத்தமாக ரூபாய் 6 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். ரூபாய் 5 ஆயிரம் ஐடிஆர் அபராதம், ரூபாய் 1000 பான் ஆதார் அபராதம். எனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் இதை உடனே செய்து முடிக்க வேண்டும். உங்கள் மொத்த வருமானம் ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால்.. ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சூழலில் மொத்தமாகப் பார்த்தால் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். எனவே கூடிய விரைவில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது நல்லது. இல்லாவிட்டால் மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வங்கி கணக்கு முதல் கிரெடிட் கார்டு விண்ணப்பம் வரை பல பலன்கள் உங்களுக்கு கிடைக்காது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision