காஸ் சிலிண்டர் விலை சற்றே அதிகரிப்பு ! வியாபாரிகள் நிம்மதி !!

காஸ் சிலிண்டர் விலை சற்றே அதிகரிப்பு ! வியாபாரிகள் நிம்மதி !!

அத்தியாவசிய சே(தே)வைகளில் ஒன்றான சிலிண்டர் வரை பரமபத ஆட்டம் போல உயர்வும், சரிவது வாடிக்கை இந்த முறையானது ஒவ்வொரு மாதமமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை மற்றும் சமையல் காஸ் விலை, டாலருக்கு எதி ராக ரூபாய் மதிப்பு அடிப் படையில், முதல் தேதியில் அந்த மாதத்துக்கான காஸ் சிலிண்டர் விலையை அரசுத்துறை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிக்கின்றன. இதன் படி, 2023 டிசம்பர் மாதத் துக்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று நிர்ணயம் செய்யப்பட்டது. வீட்டு பயன்பாட்டுக் கான 14.2 கிலோ மானியமில்லா காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சென்னையில் ஆகஸ்ட் 30ம் தேதியில் இருந்து ரூபாய் 918.50 ஆகவே தொடர்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரான 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ஆயிரத்து 942 ரூபாயில் இருந்து ரூபாய் 26.50 உயர்த்தப்பட்டு, ஆயிரத்து 968 ரூபாய் 50 பைசாவாக அதி கரித்துள்ளது. சற்றே ஏற்றப்பட்டுள்ளதால் வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision