மீண்டும் கண்ணீரை வரவைக்கிறது வெங்காய விலை !!

மீண்டும் கண்ணீரை வரவைக்கிறது வெங்காய விலை !!

பண்டிகைக்காலம் தொடங்க இருப்பதால், திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தற்போதைய பருவத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர், கோவை மாவட்டத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து இருந்துவருகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூபாய் 80 வரை விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கியது.

ஆனால் இப்போது மொத்த விற்பனையில் கிலோ ரூபாய்100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை இதுபோல் கட்டுக்கடங்காமல் உயர்ந்திருந்தது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக வியாபாரிகள் எனவே தெரிவித்தனர்.

மைசூர் பகுதியில் இருந்து காந்தி மார்க்கெட் டுக்கு வரும் சின்ன வெங்காயம் இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே வரத்து இருக்கும். அதற்கு பிறகு அங்கே சீசன் முடிந்துவிடும். ஆனால் அப்பகுதியில் பெய்த மழையால் விளைச் சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துவிட்டது என்கிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களுக்கு மட்டுமே மைசூர் சின்ன வெங்காயம் வரும். இதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்க கோவை மாவட்ட வெங்காயம் கை கொடுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வருகின்ற 14ம் தேதி புரட்டாசி அமாவாசை வருகிறது அதன்பிறகு வெங்காயத்தின் தேவை அதிகரிக்க தொடக்கிவிடும் அத்தோடு பண்டிகை காலமும் தொடங்கிவிடும் ஆகவே தேவை அதிகமாகமாகிவிடும். ஏறிய விலை இறங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விலையேற்றம் இல்லத்தரசிகளின் பட் ஜெட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை காந்தி மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனை விலை கிலோ ரூ.20 முதல் 30 வரையில் ரகத்துக்கு ஏற்பவும், சில்லறை விலை கிலோ ரூ.30 முதல் 40 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணீலே நீரெதெற்கு காலமெல்லாம் வெங்காயத்தொடு அழுவதற்கு...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision