சரக்குவிலை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர்ர் !!
தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் இயங்கி வந்த நிலையில், மாநிலம் முழுவதும் 500 கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூடியது. இப்போது தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 வரை என்றும் மற்றொருவரையாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்றும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
தமிழக்த்தின் வருவாயில் பெரும் பங்கு டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருகிறது, ஆண்டுதோறும் ரூபாய் 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. 20 மாதங்களுக்கு முன்னர் மது பானங்கள் விலை ரூபாய் 80 வரை உயர்த்தப்பட்டது. இதற்கிடையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மற்றும் இதர மதுபானங்களின் ஆயர்தீர் வையை உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி சாதாரண வகைகளுக்கு ரூபாய் 250 முதல் அதிகபட்சம் ரூபாய் 500 வரை யிலும், நடுத்தர மது வகைகளுக்கு ரூபா .300ல் தொடங்கி ரூபாய் 600 வரையிலும், வெளிநாட்டு மது பான வகைகளுக்கு ரூபாய் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஆயத்தீர்வை உயர்த் தப்படுகிறது. இதற்காக மதுவிலக்கு சட்டம் பிரிவு 18 பி பிரிவு 1 வது உட்பிரிவை திருத்தம் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் மதுபானங்களின் விலை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுப்பிரியர்கள் இதனால் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு இப்பொழுது இப்படி மறைமுகமாக பிடுங்குகிறார்கள் என வேதனை தெரிவிப்பதோடு, தரமான சரக்கும் கிடைப்பதில்லை என்கிறார்கள், இதற்கு மேலும் பாட்டிலுக்கு பத்து தண்டம் அழவேண்டுமா என குமுருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision