திருச்சி மாநகரில் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-01, Force Traveller -01, Tata Sumo Victa -01,, Bolero Jeep - 02, என 05 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் TVS Apache Motor Cycle – 02, இரண்டு சக்கர வாகனங்களும் என ஆக மொத்தம் 07 வாகனங்கள் பொது ஏல முறையில் ஏலம் நடைபெற உள்ளது.
வருகின்ற (17.10.2023)-ம் தேதி 10:00 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (13.10.2023) முதல் !(15.10.2023)-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (17.10.2023)-ம் தேதி காலை 0800 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய்.5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் இரண்டு சக்கர வாகனத்திற்கு 12% சரக்கு மற்றும் சேவை வரி (GST)-யையும் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision