மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியம் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 12 ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்ஙப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (12.10.2022) (புதன்) அன்று, திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பள்ளிப் போட்டியானது காலை 9.30 மணிக்குத் தொடங்கப்படும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு ஒருவர் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.
இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2.000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000/- வீதம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் கல்லூரி மாணர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3000/ மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000/ என்ற வகையில் வழங்கப்பெற உள்ளதாகவும், இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அண்ணல் காந்தியடிகள் பிறந்ததாள் பேச்சுப் போட்டி தலைப்புகள்
பள்ளி
1. அண்ணலின்அடிச்சுவட்டில்
2. காந்தி கண்ட இந்தியா
3. வேற்றுமையில் ஒற்றுனம 4. பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்
கல்லூரி
1.வாழ்விக்க வந்த எம்மான்
2 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
3.சந்திய சோதனை
4 எம்மதமும் நம் மதம்
5. காந்தி அடிகளின் வாழ்க்கையிலே
6.இமயம் முதல் குமரி வரை
மேற்கண்ட தகவலை திருச்சிரப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO