காய்ச்சலில் இருந்து தப்பிக்க கை கழுவுங்கள்- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து காய்ச்சலில் இருந்து தப்பிக்க கை கழுவுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புத்தூர் கிளை நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் கை கழுவுதல் குறித்து பேசுகையில்
கை கழுவுதல் (Hand washing) என்பது கையில் படிந்துள்ள மண், அழுக்குகளையும், நுண்ணுயிரிகளையும் நீக்க சுத்தம் செய்வது ஆகும். கைகழுவுவதற்கு நீர் மற்றும் கிருமி நாசினி திரவம் பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம். பல நோய்கள் கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்படுகிறன. உணவினைக் கையாளக்கூடியவா்கள், வேலை செய்பவா்கள் மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது.
பெரும்பாலான மக்கள் தீ நுண்மத் தொற்று, தடிமனாலும்பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களைத் தொடுதல், மூக்கில் விரல்வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும். கை கழுவுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நலன்கள் ஏற்படுகின்றது. இன்ஃபுளுவென்சா ஏற்படுவதக் குறைக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது. சுவாசநோய்த் தொற்றுகளைத் தவிர்க்கிறது.ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மேம்பட்ட கை கழுவும் பயிற்சிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுகின்றது.வளர்ந்த நாடுகளில் , சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்குப் பிரச்சினைகளால் ஏற்படும் குழந்தை இறப்பு வீதத்தை கிருமிநாசினி திரவம் கொண்டு கைகழுவுதல் போன்ற சில எளிய நடத்தை மாற்றங்கள் செய்வதன் மூலம் குறைக்க முடிகிறது. இந்த எளிய நடத்தை மாற்றங்களின் மூலம் மேலே குறிப்பிட்ட நோய்களினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடிகிறது என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் பேசுகையில்,
ஒவ்வொருவரும்நீர் எடுத்துக்கொண்டு நகம் உட்பட தோல்பகுதிகளை நன்றாக கழுவுதல்வேண்டும். உள்ளங் கை, புறங்கை, விரல் இடுக்கு, நகங்களை சோப் அல்லதுகிருமிநாசினி திரவம் கொண்டு கை கழுவுவதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத கைகளிலுள்ள நுண்கிருமிகளை அழிக்கலாம். நீரின் ஓட்டத்தில் குறைந்தபட்சம் இருபது விநாடிகளாவது கைகளை வைத்து கையை நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO