சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிரான சர்வதேச தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிரான சர்வதேச தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிரான சர்வதேச தினம் குறித்து விழிப்புணர்வு பிராச்சாரம் நடத்தவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, தில்லைநகர் கி.ஆ.பெ. மேல்நிலைப்பள்ளியில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிரான சர்வதேச தினம் குறித்து விழிப்புணர்வு பிராச்சரம், பள்ளி தலைமை ஆசிரியை லதா  தலைமையில் இன்று (28.06.22) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சைபர் செல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சிந்துநதி கலந்துகொண்டு தனது உரையில் போதை பொருளினால் ஏற்படும் பிரச்சனைகள், போதை பொருளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்பதில் மாணவர்களின் பங்கு, புகார் எண் 10581 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பேசினார்கள். சமூகப் பாதுகாப்புத்துறை குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் பிரபு, நேத்தலிக், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டு போதைப்பொருளினால் பாதிப்பு ஏற்படக்கூடிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள் எவ்வாறு, எங்கு செயல்படுகிறது என்பது குறித்த சிறப்புரை ஆற்றினார்கள், நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி அனைவராலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று "சட்டவிரோத போதை பொருள் புழக்கம் மற்றும் உபயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வு கூட்டம்” தொடர்ந்து நடைபெறும் எனவும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO