திருச்சி திமுக மத்திய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்- விண்ணப்பம் வழங்கல்

திருச்சி திமுக மத்திய மாவட்ட நிர்வாகிகள்  தேர்தல்- விண்ணப்பம் வழங்கல்

திருச்சி மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை கிழக்கு, புள்ளம்பாடி வடக்கு, தெற்கு லால்குடி, வடக்கு-தெற்கு, மத்திய உள்ளிட்ட 8 ஒன்றிய கழகத்திற்கான அவைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதற்கான கழகத்தின்

15வது தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மற்றும் தேர்தல் ஆணையர் வழக்கறிஞர் அருள்தாசன் முன்னிலையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO