சித்திரை தேரோட்ட விழாவிற்கு தயாராகும் சமயபுரம் மாரியம்மன் கோயில்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா வரும் 19 ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி 9-ம் நாள் அம்மன் மரகுதிரை வாகனத்தில் புறப்பாடாகி திருவீதி உலா நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேரோட்ட திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
இந்நிலையில் விழாவின் 9- ம் நாளான இன்று அதிகாலை அபிஷேகம் கண்டருளி மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தனம் சென்றடைந்தார்.
பின்னர் இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO