திருச்சியில் 960 சத்துணவு முட்டைகள் சீல் அழித்து விற்பனை - 4 பேர் கைது

திருச்சியில் 960 சத்துணவு  முட்டைகள் சீல் அழித்து விற்பனை - 4 பேர் கைது

திருச்சி துறையூரில் கடந்த வாரம் உணவகத்தில் அரசு சத்துணவு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த கடைக்கு சீல் வைத்து இரண்டு பேரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் முழுவதும் உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரகுராம் என்பவரது வீட்டில் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சத்துணவு அமைப்பாளரான ரகுராம் மனைவி சத்துணவு முட்டைகளை வீட்டில் வைத்து அதன் மீது உள்ள அரசு முத்திரைகளை அழித்துவிட்டு முட்டைகளை எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆயிஷா ஹோட்டலுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

முட்டைகளில் பாதி சீல் இருந்தும் அவற்றை அழித்தும், அழிக்க முடியாமலும் வைத்திருந்தனர். பள்ளிகளுக்கு அரசு சத்துணவு முட்டைகளை கொடுத்து வரும் நிலையில் விற்பனைக்காக முட்டையில் உள்ள சீல்களை அழித்து ஒரு கும்பல் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனையடுத்து சத்துணவு முட்டைகளை திருடி விற்பனை செய்தது தொடர்பாக, எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதேநேரம் சத்துணவு முட்டைகளை தங்களது ஹோட்டலில் விற்பனை செய்தது தொடர்பாக, ஆயிஷா ஹோட்டலுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.

ரகுராம் வீட்டிலிருந்து 960 சத்துணவு முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆயிஷா உணவாக உரிமையாளர் ஜெனரதுல் க்ருபா, இவரது சகோதரி சல்மா பீவி, ஒப்பந்ததாரர் ரகுராமன் அவரது மனைவி (அங்கன்வாடி சத்துணவு ஒருங்கிணைப்பாளர் ) சத்யா ஆகிய நான்கு பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision