திருச்சியில் கொரோனாவுக்கு நேற்று 7 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

திருச்சியில் கொரோனாவுக்கு நேற்று 7 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று 2வது அலை அதிகரித்து வந்த நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 439 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 6 ஆயிரத்து 534 பேர் உள்ளனர். 1,114 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 478 ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பெண்கள், 13 ஆண்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 770 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால் அதிக அளவில் படுக்கைகள் காலியாக உள்ளன. 158 ஆக்ஸிஜன் படுக்கைகள்,  1,065 சாதாரண படுகைகள் மற்றும் 84 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தம் 1,707 படுக்கைகள் காலியாக உள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve