கொரோனா சிகிச்சைக்கான மருந்து கேட்டு 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு போடப்படும் ரெம்டெசிவர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனையில் போடப்பட்டு வந்தாலும், இந்த மருந்து சில தனியார் மருத்துவமனையிலும் மற்றும் கள்ளச்சந்தையில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிக அளவில் பணம் கொடுத்தும் மருந்து கிடைக்காத சூழல் ஏற்பட்டு வந்தது.
இதற்காக தமிழக அரசு ரெம்டெசிவர் மருத்து அரசு மருத்துவமனையிலேயே கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று திருச்சி அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியில் அதற்கு என குழு அமைக்கப்பட்டு மருந்து விற்பனையை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து ரெம்டெசிவர் மருந்து இன்று விற்பனை இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை இயன்முறை சிகிச்சை கல்லூரி முன்பு குவிய தொடங்கினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இன்று விற்பனை இல்லை என தெரிவித்தார். ஆனால் ரெம்டெசிவர் மருந்து கேட்டு 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையெடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd