ஆழ்குழாய் கிணறு மின்சார பெட்டி வைக்க கட்டை கட்ட தனியார் நகைக்கடை உரிமையாளர் எதிர்ப்பு - போலீசார் பேச்சுவார்த்தை

ஆழ்குழாய் கிணறு மின்சார பெட்டி வைக்க கட்டை கட்ட தனியார் நகைக்கடை உரிமையாளர் எதிர்ப்பு - போலீசார் பேச்சுவார்த்தை

திருச்சி மாவட்டம்ஜமணப்பாறை நகராட்சி வார்டு எண் 11 -ல் அஹமது சந்தில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்குழாய் கிணற்றின் மின்சார பெட்டியானது இடிந்து விழுந்து உள்ளது. இதை நகராட்சி ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பின்பு கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இதன் அருகில் உள்ள தனியார் நகைக்கடை உரிமையாளர் மின்சார பெட்டி வைக்கும் கட்டை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையை தடுத்து நிறுத்தினார்.

தகவல் அறிந்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பால்ராஜ் மற்றும் நகைக்கடை உரிமையாளருடன் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கூறியும், ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் ஆணையரை அணுகி மனு ஒன்று கொடுக்க போலீசார் கூறி சென்றனர்.

இதனை அடுத்து இடிந்த இடத்தில் ஆழ்குழாய் கிணறு மின்சாரப் பெட்டி வைக்க தொட்டி கட்டுப் பணியானது நடைபெற்றது. தொட்டி கட்ட வேண்டும் என அந்தப் பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நகைக்கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி பணியை தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பரபரப் பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision