வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் இலவச விவசாய பயிற்சிகள் - முன்பதிவு தொடக்கம்
கரூர் மாவட்டம் புழுதேரி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் நாளை முதல் விவசாயிகளுக்கு இலவச வேளாண் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆறு நாட்கள் விவசாய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிகளில் நாளை (10.10.2024) அன்று அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த நெல் சாகுபடிக்கான பயிற்சி நடக்கவுள்ளது. தொடர்ந்து 15ஆம் தேதியன்று மேம்படுத்தப்பட்ட வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 22ஆம் தேதி இணையவழி மூலம் பொருட்களை சந்தைப்படுத்துதல் பயிற்சியும், 23ஆம் தேதி நெல்லில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பயிற்சியும், காளான் வளர்ப்பு பயிற்சியும்,
24ஆம் தேதி வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பயிற்சியும் துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் புழுதேரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் வழங்கப்பட இருக்கிறது. பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என்பதால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த நெல் சாகுபடி பயிற்சி - 9659098385
வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி - 9566520813
இணையவழி மூலம் பொருட்களை சந்தைப்படுத்துதல் பயிற்சி - 9750577700
நெல்லில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை - 9944996701
காளான் வளர்ப்பு - 9943042338
வெள்ளாடு வளர்ப்பு - 6380440701
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision