திருச்சி காவேரி மருத்துவமனையில் உலக இதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச முதலுதவி பயிற்சி

திருச்சி காவேரி மருத்துவமனையில் உலக இதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச முதலுதவி பயிற்சி

உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது. உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் விதத்தில் சான்றிதழுடன் கூடிய இலவச முதலுதவிப் பயிற்சியை வழங்க உள்ளனர்.

கண்டோன்மெண்ட்டில் செயல்பட்டு வரும் காவேரி ஹார்ட்சிட்டியில் நாளை (29.08.2021) காலை 11.30 -12.30 ஒரு  மணி நேரம் முதலுதவி குறித்த இலவச பயிற்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். அடிப்படை உயிர் ஆதரவு ( BLS ) என்பது உயிருக்கு ஆபத்தான நோய்கள் அல்லது காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை ஆதரவு

வழங்குநர்களால் (துணை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள்) முழு மருத்துவ பராமரிப்பு வழங்கப்படும் வரை பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ பராமரிப்பு நிலை, அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தகுதிவாய்ந்த பார்வையாளர்களால் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களால் இது வழங்கப்படலாம்.

பொதுமக்களுக்கு இதயம் குறித்த பல்வேறு சந்தேகங்களும் முதலுதவி செய்வதற்கான செய்முறை விளக்கங்களும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn