குடிபோதையில் மாநகராட்சி ஊழியர் சென்ற கார் - இருசக்கர வாகனத்தில் மோதி பல மீட்டர் தூரம் இழுத்து சென்று விபத்து

குடிபோதையில் மாநகராட்சி ஊழியர் சென்ற கார் - இருசக்கர வாகனத்தில் மோதி பல மீட்டர் தூரம் இழுத்து சென்று விபத்து

குடிபோதையில் மாநகராட்சி ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதி பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதால் மூன்று பேர் படுகாயம்.திருச்சி வயலூர் சாலையில் சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் சென்ற கார் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து..

இந்த விபத்து சம்பவம் குறித்து கோட்டை போக்குவரத்து காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாநகர் சுப்புராஜ் நகர், கொடாப் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் முருகன் தனது காரில் அவரது நண்பருடன் மது போதையில் வயலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வயலூர் பிரதான சாலையில் உள்ள சீனிவாசன் நகர் பகுதி இடையே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய முருகன் சுமார் 200 மீட்டர் தூரம் வாகனம் மாட்டிக் கொண்டதே தெரியாமல் குடிபோதையில் பயணித்துள்ளார். 

அப்பகுதி மக்கள் கூச்சிலிடவே கீதா நகர் பகுதிக்குள் காரை திருப்பி நிறுத்திவிட்டு அங்கிருந்து முருகன் அவரது நண்பர்களுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். எதிரே வந்த இரு சக்கரத்தில் வாகனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இந்த விபத்தில் சிக்கி உள்ளனர். சம்பவத்தில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு 3பேர் தனியார் மருத்துவமனையிலும்,1 அரசு மருத்துவமனிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் தீவிர சிறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்கந்தர் (38) ரசியா பானு (36) உமர் (6)சபிகா (11) உமையரா (15)

உய்ய கொண்டான் திருமலை வாசன் நகர் பகுதி சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவர் குடும்பத்தினர் வீடு காலி செய்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு உழவர் சந்தை பகுதியில் உள்ள புது வீட்டிற்கு செல்லும்போது நடந்த சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.தகவல் அறிந்து வந்த கோட்டை போக்குவரத்து காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision