மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு பா.ஜ.க துணை நிற்கும் - திருச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் பேட்டி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு பா.ஜ.க துணை நிற்கும் - திருச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் பேட்டி

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை, கார் மூலம் சென்னை சென்றார். அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை.... காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கஷ்டமான நிலை ஏற்படக்கூடாது. உச்ச
நீதிமன்றத் தீர்ப்பின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறோம்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு, தமிழக பாஜக கட்சி உறுதுணையாக இருக்கும். இதில், அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குடியுரிமை சட்டம் பொது சிவில் சட்டம் போன்றவை இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது போல் சிலர் உருவாக்கம் செய்கின்றனர்.

இந்தச் சட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த ஷரத்தும் இல்லை. மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனை பற்றி குறிப்பிடும் போது, தமிழ்நாட்டில் கொங்குநாடு பகுதியை சேர்ந்தவர் என்று இருந்ததை, சர்ச்சையாக்கி உள்ளனர்.

தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளில், 30% மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 70% தடுப்பு மருந்தை திமுகவின் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM