முடிதிருத்தும் தொழிலுக்கு வரிவிதிப்பதை நிறுத்தக்கோரி அமைச்சரிடம் மனு
முடிதிருத்தும் தொழிலுக்கு வரி விதிப்பு நிறுத்தக்கோரி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் உறுப்பினர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இம்மனுவில் சேவை தொழிலாளர் முடிதிருத்தும் தொழிலுக்கு சென்ற ஆட்சியின் போது தொழில் உரிமம் என்ற பெயரிலும் ஒவ்வொரு கடைக்கும் ஆண்டு ஒன்றுக்கு இவ்வளவு வரி என்றும் அதிகபட்ச தொகை அறிவித்திருந்தார்கள்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராடி கேட்டுக்கொண்டதற்கிணங்க சேவை தொழில் என்ற அடிப்படையில் வரிவிதிப்பை சென்ற ஆட்சி நிறுத்தியது.
இப்பொழுது மீண்டும் தமிழக வருவாய்த்துறை முதல்முறையாக சென்னையிலும் ஒரு சில மாவட்டங்களிலும் வரிவிதிப்பு தொடங்கியிருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளாக தொடரும் கொரானா பேரிடர் கால கட்டங்களில் இதுபோன்று வரிவிதிப்பு தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கும்.
இந்த சூழலில் வரிவிதிப்பு தடை செய்ய வேண்டும் என்றும். மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு மாநில மாவட்ட அளவில் முடிதிருத்தும் சமுதாயத்தினரை நிர்வாகிகளாக அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM