திருச்சியில் நள்ளிரவில் திருடு போகும் விலை உயர்ந்த சைக்கிள்கள் - சிசிடிவி காட்சி

திருச்சியில் நள்ளிரவில் திருடு போகும் விலை உயர்ந்த சைக்கிள்கள் - சிசிடிவி காட்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி  வைத்திருந்து உள்ளார். கடந்த (21.06.2023)ம் தேதி நள்ளிரவில் ஒரு மணிக்கு மேல் இளைஞர் அவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே இருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அனிஷ் பாலாஜி புகார் அளித்துள்ளார். முக்கியமாக இந்த சைக்கிள் 8 கிலோ எடை கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டது. 9 கியர் கொண்ட அதிக வேகம் செல்லக்கூடியது என புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இத்தெருவில் இதே போல் மூன்று சைக்கிள்கள் திருடுபோய் உள்ளது.

முகமூடி ஏதும் அணியாமல் சாதாரணமாக வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிள் திருடிய உள்ளார். அந்த இளைஞர் மற்ற சைக்கிள்களை திருடி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தத்தில் இவருடைய குறி விலை உயர்ந்த சைக்கிள்கள் என்பது தற்பொழுது தெரிந்துள்ளது.

அதற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது. அதில் சைக்கிளை திருடுபவரின் முகம் தெளிவாக தெரிகிறது. காவல்துறையினர் உடனடியாக சைக்கிள் திருடனை பிடித்து சைக்கிளை மீட்டுக் கொடுக்குமாறு பறிகொடுத்து  கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn