போட்டி போட்ட தனியார் பேருந்துகளால் அடியில் சிக்கிய இருசக்கர வாகனகம்

போட்டி போட்ட தனியார் பேருந்துகளால் அடியில் சிக்கிய இருசக்கர வாகனகம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்திக்கொண்ட பேருந்துகள் சாலையில் செல்கின்ற இரு சக்கர வாகன அச்சுறுத்தி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

நேற்று இரவு (15.09.2023) இரவு VAT மற்றும் MJP ஆகிய பெயர்கள் கொண்ட தனியார் பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு, பேருந்து ஓட்டுனர் ஒருவர் மது போதையில் அதிவேகமாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். 

இதில் இருசக்கர வாகன ஓட்டி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வண்டி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல் ஆய்வாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன் மற்றும் அங்கு வேகத்தடை அமைத்து தர வேண்டும். அங்கு ஒரு காவலர் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு நேரங்களில் பேருந்து ஓட்டுனர்களை மது போதையில் உள்ளனரா என்பதை சோதனை செய்ய வேண்டும், அனைத்து தனியார் பேருந்துகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision