ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

திருச்சி- ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - மதுரை- வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் காலை - மாலை நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்று உத்திரவிட்டது. அதன்படி இன்று (16.09.2023) காலை 9:30 மணிக்கு ஸ்ரீரங்கம் 3-வது பிளாட்பார்ம்-க்கு வந்து நின்றது.

இந்த வைகை ரயிலுக்கு ஸ்ரீரங்கம் மக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள், அனைத்து தேசிய, மாநில கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக சென்று வரவேற்று இனிப்புகளை வழங்கி ரயில்வே டிரைவர்களுக்கும், ஸ்டேசன் Supt-க்கும் நன்றிகளை தெரிவித்து சால்வை அணிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.

இதற்காக பாடுபட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கும் ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision