திருச்சியில் பள்ளி மாணவி யூடியூப் பார்த்து தற்கொலை சம்பவம் -போலீசார் விசாரணை

திருச்சியில் பள்ளி மாணவி யூடியூப் பார்த்து தற்கொலை சம்பவம் -போலீசார் விசாரணை
திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன் இந்த தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிவானி (13) வயது மகள் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இதையடுத்து கணவன் மனைவி பிரிந்து வாழ்வது வருவதால்  திருச்சியில் உள்ள தனது அம்மா வீட்டில் சிவானி  வசித்து வருகிறார்.

தினமும் ஷர்மிளா காலையில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். நேற்று வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து கதவை தட்டியவுடன் மகள் கதவை திறக்கவில்லை. பின்பு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது தனது மகள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணை செய்த போலீசார்  தற்கொலை முடிவு செய்துகொள்ள காரணம் என்னவென்று ஆதாரங்களை சேகரித்தனர்.

முன்னதாக மாணவி தன் தாயிடம் உடல் பருமனாக இருப்பதாகவும் தொடர்ந்து குறிப்பிட்ட வந்துள்ளார். தாய் வங்கியில் பணிபுரிவதால் வீட்டிலேயே இருக்கும் இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பலவகை உணவுகளை உட்கொண்டு வந்துள்ளார். இந்த உணவுகள் மூலம் அவருடைய உடல் பருமனாகி இருக்கலாம் என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிவானி யூடிபில் பல்வேறு வீடியோ காட்சிகளை பார்த்து அதன் மூலம் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார் என்பதை போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்

செல்போனில் யூடியூப்பிற்க்கு சென்று எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என வழிகளை நன்கு பார்த்து இந்த தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பின்னர் அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn