வஉசி, சின்ன மருது - பெரிய மருது, வீரமங்கை வேலுநாச்சியார் வேடம் அணிந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் அஞ்சலி 

வஉசி, சின்ன மருது - பெரிய மருது, வீரமங்கை வேலுநாச்சியார் வேடம் அணிந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் அஞ்சலி 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், உள்ளிட்ட 5 பேர் உயிர் நீத்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஜனவரி 25ம் தேதி அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

இதன் ஒருபகுதியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையிலுள்ள கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் தியாகிகளின் நினைவிடத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வஉசி, சின்ன மருது - பெரிய மருது, வீரமங்கை வேலுநாச்சியார் வேடம் அணிந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் குடியரசு தின ஒத்திவைப்பு அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn