திருச்சி கவுன்சிலர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

திருச்சி கவுன்சிலர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக அதிமுக கட்சியை சேர்ந்த சாருமதி என்ற பெண் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

அப்போது செடிமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த வாக்காளர்கள் சிலர் வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த சென்ற பொழுது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர். அப்படி சுமார் 90 வாக்காளர்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சாருமதி இது சம்பந்தமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்க அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு நீக்கப்பட்ட வாக்காளர்களுடன் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்த பொழுது இவர்கள் பெயர் எப்படி நீக்கி உள்ளீர்கள் எனக் கூறி கேள்வி கேட்டு சத்தம் போட்டு உள்ளார்.

அப்பொழுது திமுகவை சேர்ந்த துவாக்குடி நகராட்சி செயலாளரும், நகராட்சி தலைவருமான காயாம்பு வந்துள்ளார். அப்பொழுது சாருமதிக்கும், காயாம்புவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மிரட்டலாக மாறியதாக கூறப்படுகிறது. சாருமதியை காயம்பு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சாருமதி அதிமுக கட்சியின் மாவட்ட தலைமையிடம் கூறியுள்ளார். அதற்கு மாவட்ட தலைமை காயாம்பு மீது புகார் கொடுக்கும் படி அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையில் சாருமதி ஆன்லைனில் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்த பெண்ணை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதாக துவாக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் சாருமதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சாருமதியை கைது செய்வதற்காக போலீசார் முயன்று வருவதாகவும் அப்படி கைது செய்யும் பட்சத்தில் அதிமுக கட்சியினர் எதிர்த்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபடுவார்கள் என்றும்

அதனை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் போலீசார் தேவை என திருச்சி எஸ் பி இடம் துவாக்குடி போலீசார் கூறியதாகவும், எஸ் பி தேவையான போலீஸ் எடுத்துக் கொள்ளுங்கள் சாருமதியை கைது செய்து சிறையில் அடையுங்கள் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துவாக்குடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சாருமதி செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாருமதி கைது செய்வதற்காக துவாக்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision