கவனமாய் இருந்தால் மழைக்கால பயணமும் சுலபமே

கவனமாய் இருந்தால் மழைக்கால பயணமும் சுலபமே

மழைக் காலம் ஆரம்பமாகி விட்டது மழையால் பல சாலைகள் இன்று நீர்நிலைகளை போலவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் நாம் பயணங்களை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றுவது அவசியமானது. தேவை மற்றும் அலுவல் காரணமாக வெளியே செல்வது தவிர்க்க முடியாத ஒன்று அவ்வாறு செல்லும் பொழுது பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். 

குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் தேக்கம் சாலைகளில் மேடுபள்ளங்கள், பாதாள சாக்கடை திறப்புகள் போன்றவை பயணங்களில் கேள்விக்குறியாகும் சில நேரங்களில் ஆபத்தானதாக மாற்றிவிடும். இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் வாகனத்தின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்குகிறதா என சரி பார்த்துக் கொள்வது சிறந்தது. பிரேக் டயர் ஆகியவை சரியான நிலையில் இருக்கிறதா என கவனிக்க வேண்டும் இதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.

ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் போன்றவை சரியாக இயங்குகிறதா என சோதித்து பார்த்துக் கொள்வது சிறந்தது.
மழைக்காலங்களில் அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து மெதுவாக செல்வது நல்லது. மேலும் சாலையில் செல்லும் போது நிதானமாக பயணிக்க வேண்டும். மழைக்காலங்களில் வாகனத்தின் பிரேக்கை அழுத்தும் போது உடனடியாக ஒரே நேரத்தில் இரு விரல்களால் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டும்.

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் குடைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ரெயின்கோட் பயன்படுத்தி கொள்ளலாம். மழைக்காலங்களில் முடிந்த வரை வெளியூர் பயணங்களை தவிர்ப்பது சிறந்தது. மழைக்காலத்தில் பயணம் சற்று சவாலான ஒன்று எனவே முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை நாம் அனுபவிக்கலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision