ரூ.4000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமையா மகன் செல்லதுரை. ராமையாவுக்கு தேவனூர் புதூர் கிராமத்தில் சுமார் 1.25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமையா கடந்த பிப்ரவரி 2021 இல் இறந்து விடுகிறார். இவரது வாரிசுகளாக இவரது மனைவி அமுதா மகன்கள் செல்லதுரை, சுரேந்தர் மற்றும் சுபத்திரா என்ற மகளும் உள்ளனர்.
மேற்படி ராமையா பெயரில் உள்ள சொத்துக்களை அவரது வாரிசுகள் நால்வரின் பெயர்களில் மாற்றுவதற்காக ராமையா மகன் செல்லதுரை தேவானூர் புதூர் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத்தை கடந்த 30.12.2021 அன்று அணுகி ராமையா பெயரிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரியுள்ளார்.
அதற்கு விஏஓ விஸ்வநாத் ஐயாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு பின் ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு 4000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லதுரை திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான
போலீசார் இன்று (3.1.2023) செல்லதுரையிடமிருந்து விஏஓ விஸ்வநாத் 4000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். செல்லதுரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டா பெயர் மாற்றம் கோரி அளித்திருந்த விண்ணப்பத்தின் பேரில் ஏற்கனவே விஏஓ விஸ்வநாத் லஞ்சம் கேட்டதை செல்லதுரை கொடுக்க மறுத்ததால் அவரது விண்ணப்பம் விஏஓ விஸ்வநாத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn