திருச்சி ரயில்வே பணிமனையில் 50வது எல்.எச்.பி. பயணிகள் ரயில் பெட்டி வழியனுப்பும் விழா!!

திருச்சி ரயில்வே பணிமனையில் 50வது எல்.எச்.பி. பயணிகள் ரயில் பெட்டி வழியனுப்பும் விழா!!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் பெட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் எம்.ஜி. ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நாளடைவில் பி.ஜி ( அகல பாதை ) ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisement

2018ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் பெட்டிகள் பராமரிக்கும் பொறுப்பு பொன்மலை பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை தொடங்கிய முதல் ஆண்டான 2018 முதல் 2019 வரை 3 எச்.பி. பெட்டிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாம் வருடத்தில் 18 எல்.எச்.பி. பெட்டிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வருடத்தில் மட்டும் 29 எல்.எச்.பி. பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. 

இதுவரை மொத்தம் 50 எல்.எச்.பி. பயணிகள் ரயில் பெட்டிகள் பராமரிப்பின் மூலம் பொன்மலை பணியானது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று 50ஆவது எல்.எச்.பி. பயணிகள் ரயில் பெட்டியை வழியனுப்பும் விழா பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்றது. அதனை பணிமனை முதன்மை மேலாளர் ராம் கொடியசைத்து பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்தார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS