திருச்சியில் ஊரடங்கு நாளில் கிரிக்கெட் போட்டி - கோவிட் தொற்று பரவும் அபாயம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக திருச்சியில் உள்ள 10 விளையாட்டு மைதானங்களை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம். இப்போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகிறது.கோவிட் தோற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது நான்கு விளையாட்டு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.
குறிப்பாக சாரநாதன் பொறியியல் கல்லூரி, ஜேஜே பொறியியல் கல்லூரி ,தேசிய தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட 4 மைதானங்களில் 52 அணிகள் விளையாடி வருகிறது.இதில் பங்கேற்று விளையாடி வரும் அணிகள் தற்பொழுது கோவிட் தொற்று இரண்டாவது அலைையினால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்று கபோட்டி நடத்த முடியாது என்பதால் சனிக்கிழமைகளில் போட்டி நடத்த திட்டமிட்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று இருக்கிறது.50 கிளப்புகள் இதில் பங்கேற்றுள்ளனர். 5 டிவின்களாக பிரிக்கபட்டு பத்து அணிகள் ஒன்பது லீக் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் திருச்சி கிரிக்கெட் சங்கத்தின் குழு சார்பாக விக்னேஸ்வரன் என்பவர் மனு அளித்துள்ளார். மனுவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்போது போட்டி நடத்த கூடாது .இதனால் போட்டியில் பங்கேற்க்கும் வீரர்கள் மற்றும் போட்டி நடத்துபவர்களுக்கு கோவிட் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது . ஆகவே உடனடியாக போட்டிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இம்மனுவினால் திருச்சிராப்பள்ளி கிரிக்கெட் சங்கத்திற்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தொற்றுடன் சிலர் விளையாட்டில் உள்ளதாகவும் இதனால் மற்றவர்களுக்கு பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது .இரண்டாவது அலையில் வேகமாக பரவி வரும் நிலையில் இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் மீறி வரும் ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் நடத்தினால் ஊரடங்கு அனைவருக்கும் சமமானது வீரர்களுக்கு மட்டும் கிடையாதா என பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்வியாக எழும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu