கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!!
Advertisement
கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Advertisement
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாக பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
Advertisement
இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக கருதி வணங்கும் முகமது நபிகளை கொச்சைப்படுத்தி பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோன்ற அவதூறு பேசி வரும் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சமுதாயத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் திருச்சி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் வந்தனர்.
பின்பு காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் பத்து நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்து வந்தனர்.