ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி தேதி

ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி தேதி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 60 மாணவர்கள் வீதம் 5 பாடப்பிரிவுகளில் ( அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல்) மொத்தம் 300 இடங்கள் உள்ளன. 2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இக்கல்லூரியில்   விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் இதனுடைய வழிமுறைகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கல்லூரியில் (Code no: 136) முதலாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர் httap://www.tngaptc.in (or) httap://www.tngaptc.com என்ற இணையதளத்தில் 19-07-2021 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இணையதள வாயிலாகவோ அல்லது இக்கல்லூரியில் செயல்படும் சேவை மையத்தில் (Tamilnadu Polytechnic Admission Facilitation Centre - TPAFC No.46) மூலமாகவோ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் இச்சேவை மையத்தை உடன் அணுகி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயனடையலாம்.

பதிவுக்கட்டணம் ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit card / Credit card, Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினர் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd