நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகர காவல்துறை?

நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகர காவல்துறை?

பள்ளி மாணவர்கள் தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வாடிக்கையாகியுள்ளது இதில் வேடிக்கை என்னவென்றால் காவல்துறையினர் கண்முன்னே செல்வது தான். பள்ளி ஆரம்பிக்கும் சமயமும் முடியும் நேரத்திலும் மாநகர எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் போக்குவரத்தை சீர்செய்து வருகிறார்கள்.

இவர்கள் கண்முன்னே பள்ளி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனத்தில் சிட்டாய் பறப்பது வாடிக்கை. இதே போல அனைத்து பள்ளியிலும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் இல்லாமலும், மூன்று பேர் செல்வதும் , அதிவேகமாக செல்வதும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவுக்கும் வகையில் வாகனத்தை இயக்குவதும் என தினந்தோறும்  நடக்கும் செயல்

இது பற்றி பல முறை சமூக வலைதலத்தில் பதிவிட்டும், காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இது தொடர்கதையாகி வருவது கவலைக்குரிய விஷயம். இது தொடரபாக காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போல் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளியையும்,  கண்காணித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO