சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர் - வைரலாகும் வீடியோ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு மாணவர்களிடம் கட்டாயம் வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது
இது குறித்த வீடியோ ஒன்று சமூக வளத்தங்களை வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் நான்கு பேர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவை என்பதால் அதை வாங்குவதற்கு பள்ளிக்கூடம் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்துள்ளனர் அப்பொழுது கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி என கல்வித்துறை அறிவித்து சான்றிதழ் வழங்கி இருந்தது. ஆனால் இது போன்ற மேல் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருகிறது.
இந்த மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியை அணுகிய போது பள்ளி தலைமை ஆசிரியர் மாணவரிடம் மதிப்பெண் சான்று வழங்க தலா ரூ.500 வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஒவ்வொருவரும் A4 பேப்பர் பண்டல் ரெண்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். கையில் பணம் இல்லாத மாணவர்கள் ஒரே ஒரு பண்டலை மட்டும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்கும்போது அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் திட்டுகிறார்.
மேலும் மற்றொரு சேரில் அமைந்துள்ள ஆசிரியை இந்த நான்கு எருமை மாடுகளை வெளியே விரட்டி விடுங்கள். இவர்கள் ஐடிஐயும் - படிக்க வேண்டாம் மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம். மாணவர்கள் காசு இல்லை டீச்சர் ஆனால் அதன் ஒன்று வாங்கி வந்தோம் என்று கெஞ்சுகின்றனர். 10 ,12 , 13 மார்க் போடட்டுமா இவர்களுக்கு இது போதும் என மீண்டும் தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
போங்கடா போங்கடா என விரட்டு விரட்டுவது மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சான்றிதழ் வழங்க தலைமை ஆசிரியர் லஞ்சம் கேட்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சொந்த மாவட்டத்திலேயே மாணவரிடம் அரசு பள்ளிகள் கட்டாய வசூல் செய்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பு ஏற்படுத்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn