வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

திருச்சி  வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா   பக்தர்கள் பால்குடம் காவடி மற்றும் அலகு  குத்தி வந்தனர்.


 ராம்ஜிநகர்.ஜூன்-2 திருச்சி அருகே உள்ள புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவிலில் வருடம் தோறும் வைகாசி  விசாக பெருவிழா மற்றும் அதனை  முன்னிட்டு  பத்து நாட்களுக்கு முன்பாக  கொடியேற்றம் நடைபெறும்.

பின்பு விசாகத்திற்கு முதல் நாள் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெறும் ஆனால் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது திருக்கோவில் பாலாலயம் செய்யப்பட்டதால்.

இந்த வருடம் திருத்தேரோட்டம்  நடைபெறவில்லை ஆனால் வைகாசி விசாகத்திற்காக கடந்த 10 நாட்களாக விரதம் இருந்த முருகபக்தர்கள் பால்குடம்,காவடி மற்றும் அலகு குத்தியும்  வந்தனர் மேலும் திரளான பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று முருகனை வழிபட்டு  சென்றனர். 


வைகாசி விசாகத்தை முன்னிட்டு  வயலூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் மற்றும்  அலகு குத்தி வந்த போது எடுத்த படம்.