ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில் நடந்த ஜோதிடர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!!

ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் - திருச்சியில் நடந்த ஜோதிடர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்!!

பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வதுரை, நிறுவனர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கோபால்சாமி, வடிவேல், கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

Advertisement

முன்னதாக வள்ளுவர் குல பஞ்சாங்கம் வெளிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும்,வள்ளுவர் குலத்தவருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement

மேலும், ஜோதிடர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..