துறையூர் மின் மயானத்தில் ரூபாய்500 வசூலித்து ரூபாய்300-க்கு ரசீது

துறையூர் மின் மயானத்தில் ரூபாய்500 வசூலித்து ரூபாய்300-க்கு ரசீது

திருச்சி மாவட்டம் துறையூரில் இறந்தவரின் உடல்களை எரிப்பதற்காக துறையூர் ஆத்தூர் சாலை, கீரம்பூர் சாலை, பழைய ஹவுசிங் போர்டு பகுதி, ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி எதிரே என நான்கு இடங்களில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக தகன மேடை உள்ளது.  

இந்த நிலையில் துறையூர் ஆத்தூர் சாலையில் மின் மயான மேடை உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒருவரின் உடல் எரிந்து கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே விழுந்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர சா மயானத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் மின் மயான மேடை சரி செய்து தருவதாக கூறிவிட்டு சென்றார். 

அதனைத் தொடர்ந்து மின் மயான தகனம் மேடையே பராமரிப்பதற்காக அன்று முதல் மூடப்பட்டது. இன்று வரை திறக்கப்படவில்லை ஆனாலும் மின் மயானத்தில் விறகு, ராட்டிகளை வைத்து தகாண எரிவாயு மேடையில் உடல்களை தற்போது வரை எரித்து வருகின்றனர். இதற்கு 500 ரூபாய் வசூல் செய்து 300 ரூபாய்க்கான ரசீதை கொடுக்கிறார்கள். 500 ரூபாய்க்கான ரசீதை கேட்டால் 300 ரூபாய்க்கு மட்டுமே தருகிறார்கள், 200 ரூபாய் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தர வேண்டும் என குற்றம் சாட்டுகின்றனர். 

குறிப்பாக நான்கு சுடுகாட்டில் ஆத்தூர் சாலையில் உள்ள மின்மயானத்தில் மட்டும் நகராட்சி சார்பாக பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து கேட்டால் இந்த ரசீதை கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கிறார்கள்.   கடந்த17ஆம் தேதி நாகலிங்கம் என்பவர் சென்னையில் இறந்து- இவரது உடல், 19ஆம் தேதி துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயான மேடையில் தகனம் செய்துள்ளனர்.   

இது குறித்து இறந்தவரின் உறவினர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து உள்ளார்.மின் மயானம் தற்போது செயல்பட்டு வருவதாக கணக்கில் காட்டி 500 ரூபாய் வசூல் செய்து 300 ரூபாய்க்கு ரசீது கொடுக்கிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர்.

வார்டு கவுன்சிலர் மற்றும் அதிமுக நகர செயலாளரான அமைதி பாலுவிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தும். இவர் நகர்மன்ற கூட்டத்தில் இது குறித்து பேசாமல் இருந்துள்ளனர்.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision