மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் வெளியேறுகிறது; பெல் நிறுவனத்தின் மீது மக்கள் புகார்

மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் வெளியேறுகிறது; பெல் நிறுவனத்தின் மீது மக்கள் புகார்

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் அலட்சியப்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி உட்பட்டது கணபதி நகர் பகுதி ஆகும்.

இந்த பகுதியில் மதிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை நீர் வடிவதற்கு வடிகால்வாய்கால் உள்ளது.அந்த மழை நீர் வடிகால் வாய்கால் வழியாக பெல் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேறுவதாகவும் இதனால் கனபதி நகர் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.என கணபதி நகர் பொதுமக்கள் கூத்தை பார் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டு புகார் அளித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2024 வது ஆண்டு கூத்தைப்பார் பேரூராட்சி செயலாளராக இருந்த கணேசன் முதல் பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.அந்த கடிதத்தில் பெல் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை நீர் வடிகால் வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாகவும் எனவே மழைநீர் வடிகாலை உடனடியாக அடைக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு அதை தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2003 பிரிவு 367 இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிகுறி தபால் அனுப்பியுள்ளார். ஆனால் பெல் நிர்வாகம் தொடர்ந்து செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி பெல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூத்தைப்பார் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் ஏற்கனவே முதல் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வரும் மழை நீர் வடிகாலை அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டி காட்டியதோடு மீண்டும் அதனை அடைப்பதற்கு வலியுறுத்தி மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.ஆனால் பெல் நிர்வாகம் எதற்கும் செவி சாய்க்கவில்லை இப்படி அரசு அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தி பொதுமக்களுக்கு விரோதமாக செயல்படும் பெல் நிர்வாகத்தின் மீது பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision