கட்டிட கழிவுகளால் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மூன்று நாட்களாகியும் வடியாத மழைநீர்- மக்கள் அவதி

கட்டிட கழிவுகளால் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மூன்று நாட்களாகியும் வடியாத மழைநீர்- மக்கள் அவதி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 38வது வார்டில் மூன்றாவது நாளாக மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தஞ்சமாகி உள்ளனர். கோரையாற்றுப் பகுதியில் வந்த மழை நீரால் இப்பகுதிகளிலுள்ள வீடுகளில் மூன்று நாட்களாக நீரால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 வயதானவர்கள் சிரமப்பட்டு தேங்கியுள்ள மழைநீரை கடக்கக்கூடிய காட்சிகளை காண முடிந்தது.

 திருச்சி மாநகராட்சி மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோரையாற்று பகுதியில் செல்லக் கூடிய மழை நீரின் அளவு சற்று தற்போது குறைந்துள்ளது.

வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்ததற்க்கு கோரையாற்றில் மழைநீர் செல்ல முடியாத அளவுக்கு கட்டிட கழிவுகளை ஆற்றின் தரை பாலத்தில் கொட்டி உள்ளனர். மழைநீர் வேகமாக செல்ல முடியாமல் கிருஷ்ணாபுரம் மற்றும் குட்டி மலை ,கங்கை நகர் பகுதியில் உள்ள வீடுகளை நீர் சூழ்ந்தது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn