உறையூர் கடைவீதியில் மதுபானகடைகளை அகற்ற மனு

உறையூர் கடைவீதியில் மதுபானகடைகளை அகற்ற  மனு

திருச்சி மாநகரம் பகுதியில் பிரதான சாலையில் கோவில்கள் , பள்ளிகள் அருகருகே உள்ள முக்கிய பகுதியான உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10203 , 10405 , 10519 ஆகிய மூன்று கடைகள் உள்ளன . இதில் இரண்டு கடைகளில் பார்கள் வசதியுடன் உள்ளது . இந்த இடம் கடைகள், பஸ் நிறுத்துமிடம், அதிகமான மக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகளை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது .

 இதற்கான போராட்டங்களும் நடைபெற்றுள்ளது . இந்நிலையில் ஆகஸ்ட் 9 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் மாலை வேளையில் பொதுமக்கள் கூடியிருந்த உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடையின் பாரில் மது அருந்திய நபர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சரண்ராஜ் ( வயது 25 ) என்பவர் கொடூரமாக குத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்து மக்கள் அச்சமடைந்துள்ளனர் .

இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலே இரவு 9 மணிக்கு மீண்டும் மூன்று டாஸ்மாக் கடைகளும் காவல்துறை உதவியுடன் திறக்கப்பட்டது வேதனையளிக்கிறது .

 இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவரிடம் உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகருகே மூன்று கடைகள் வசதியுடன் உள்ளதை பொதுமக்கள் நலன் கருதி மூடவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் க.இப்ராகிம், தமிழ்நாடு ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சூர்யா, மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் பாட்சா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO