இலவச இயற்கை மருத்துவ முகாம்
"சுதந்திரதின அமுத பெருவிழா" எழுபத்தி ஐந்தாவது ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டுதிருச்சி க்ரியா அறக்கட்டளை, சீனிவாசா நகர் ஸ்ரீ ஜெய ரங்கா இயற்கை மருத்துவ மற்றும் யோக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தியஇலவச இயற்கை மருத்துவ முகாம் திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 7 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை நடைபெற்றது.
வேளாண்மை ஆலோசகர் முனைவர் கேசி சிவபாலன் கலந்துகொண்டு ஆரோக்கிய இந்தியா என்ற தலைப்பில் பேசினார். ஸ்ரீ ஜெய ரங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவர் கௌதம்குழுவினர் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் பெண்களுக்கு ஏற்ற சரி விகீதஉணவு, அன்றாட உடற்பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் வணிக துறையின் துணை இயக்குனர் ஜி சரவணன் வழிகாட்டுதலின் பேரில் வேளாண்மை அலுவலர் நவிதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO