வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்- கண்டுகொள்ளுமா திருச்சி மாவட்ட நிர்வாகம்

May 20, 2022 - 20:39
May 20, 2022 - 23:46
 1381
வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்- கண்டுகொள்ளுமா திருச்சி மாவட்ட நிர்வாகம்

திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்த ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு மேல் கூடுதல் 15 ரூபாய். அதாவது இரவு 11:30 க்கு வாகனம் நிறுத்தி அதே இரவு 12:30 மணிக்கு வாகனம் எடுத்தால் 15+15 = ரூ30 கட்டணம் செலுத்த கூறி கட்டாயபடுத்துகிறது.

மேலும் கூடுதலாக வசூலிக்கும் 15ரூபாய்க்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை digital transcation ம் செய்யக்கூடாது என கட்டளையிடுகின்றனர். இதுபோல் கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண வரையரை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO