திருச்சியில் அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

திருச்சியில் அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

திருச்சியில் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சுவாமிநாதன் தெருவை சேர்ந்த பொறியாளர் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தேசிய பசுமை தீர்ப்பாயம், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில்..... தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொன்மலை எனும் பகுதியில் ரயில்வே பணிமனை சுமார் 75 வருடங்களுக்கு மேலாக அமைந்துள்ளது.

மேற்படி பணி மனையை சுற்றிலும் ரயில்வே குடியிருப்பு பகுதிகள் அமைந்து இருந்து. மேற்படி குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுது அடைந்து, அங்கு மக்கள் யாரும் வசிக்க இயலாத காரணத்தினால் தற்பொழுது அப்பகுதியிலுள்ள பழைய பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டும்,

அங்கு மன்றிகிடந்த சுற்றுசூழலை அழிக்கும் கருவை முள் செடிகள் அகற்றப்பட்டு வந்தது. தற்பொழுது மேற்படி பணிகள் முடிந்த சூழலில் சுற்று சூழலுக்கு மிகுந்த பயன்தரக்கூடிய நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆயிரக்கணக்கான வேப்பமரங்கள் மற்றும் ஆலமரங்கள், அரச மரங்கள் போன்றவைகள் வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த மேற்படி மரங்கள் மிகவும் பழமை வாய்ந்த மரங்கள் ஆகும். ஏற்கனவே நாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றங்கள் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக பெருகி வருகிறது. இச்சூழலில் இது போன்ற மரங்களை பொன்மலை பகுதியில் வெட்டி சாய்ப்பது மனித குலத்திற்கு பெரும் அநீதியாக கருதி மேற்படி தவறான செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி மக்களை காத்திடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நியாயம் கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தினை அணுக தயாராக உள்ளேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision