நடைபாதை ஆக்கிரமிப்பு - பாதிப்புக்குள்ளாகும் கோயில் மற்றும் பொதுமக்கள்

நடைபாதை ஆக்கிரமிப்பு - பாதிப்புக்குள்ளாகும் கோயில் மற்றும் பொதுமக்கள்

திருச்சியில் தென்னூர் பகுதி தினம்தோறும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மிகவும் குறுகலான சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்லும் நேரத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் அனைத்து நடைபாதைகளும் வியாபாரிகள் ஆக்கிரமித்து தங்கள் கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்க நேரிடுகிறது.

மேலும் தென்னூர் விஸ்வநாதபுரம் சிவன் கோவில் பின்புறம் உள்ள சாக்கடையை ஆக்கிரமித்து ஒரு டிபன் கடை கட்டப்பட்டதுடன் பாதசாரிகள் நடைபாதையும் ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு உள்ளது. இந்த கடை அடுப்பில் இருந்து வெளியேரும் கரும் புகை, கோவில் சுவாமி சிலைகளையும், சுவர்களையும், மண்டபங்களையும் பாழ்படுத்தியும், மழை நீர் செல்லும் சாக்கடை ஆக்கிரமித்து அதன் மேல் கடை கட்டுப்பட்டு உள்ளதால் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலை முழுவதும் நீர் தேங்கி மழைக்காலத்தில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் ரெட்டை வாய்க்கால் தெரு என்ற பெயரில் சாக்கடை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாக்கடை மேல் கட்டப்பட்டுள்ள மரக்கடை, பிரியாணி கடைகள், கறிக்கடைகள் ஆகியவற்றின் கழிவுகள் அப்படியே நேராக சாக்கடையில் கொட்டப்படுகிறது. மேலும் பல இடங்களில் வீடுகளுக்கு முன்பாக குறுகிய இடத்தில் கடைகள் கட்டப்பட்டு வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மேலும் புதை வடிகால் நீரை நேராக குழாய் போட்டு பொது சாக்கடையில் விட்டு உள்ளனர். இதனால் அருகாமையில் குடியிருப்பில் வசிக்கும் பொது மக்கள் தினசரி உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். 

இவற்றை கவனிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு கவனிக்கப்படுவதால் கண்டும் காணாமல் இருக்கும் சூழல் உள்ளது. ஆகவே நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் தொகுதியான தென்னூர் பகுதியில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ரெட்டை வாய்க்கால் தெரு சாக்கடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியும் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அமைத்திட வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision