பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் - அசத்திய ஆல்ஃபா விஸ்டம் வித்யாஷ்ரம் மேனிலைப்பள்ளி
திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், வாகீஷா வித்யாலயாவில் கடந்த (27.07.2024) அன்று வின் பேஷ், பள்ளிகளுக்கு இடையேயான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஆல்ஃபா விஸ்டம் வித்யாஷ்ரம் மேனிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றனர்.
கால்பந்து, குறும்படம் ஆகியவற்றில் முதல் பரிசும், குழு நடனத்தில் இரண்டாம் பரிசும், தனி நபர் நடனப்போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளும், குழு வாத்திய இசையில் இரண்டாம் பரிசும் இன்னும் பல பரிசுகளும் பெற்றனர். இதில் குறும்படம் லட்சியம் கொண்ட மாணவன் ஒருவன் எப்படி ஆசிரியர் மற்றும் தலைவர் ஒருவரின் உரையினால் ஈர்க்கப்பட்டு, எப்படி முன்னேறி நல்ல முன் உதாரணத் தலைவராக மாறுகிறான் என்பதே கதை.
இதில் அஜ்மல் மற்றும் அஃப்ராஸ் லட்சிய மாணவனாகவும், பால ப்ரகல்யாண் தந்தையாகவும், மோஹித் அரசியல் தலைவராகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஒளிப்பதிவாளராக முஷ்டக், உதவி இயக்குனராக ஆலன் பால், இயக்குனராக பஸனியோ தங்கள் பங்கை அளித்தனர். ரஷான் திரைக்கதை எழுதியும், அப்துல் பாசித் எடிட்டர் ஆகவும், தங்கள் பங்களிப்பை அளித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision