சுந்தரம் மருத்துவமனை சார்பில் இலவச இருதய ஆன்ஜியோகிராம் சேவை

சுந்தரம் மருத்துவமனை சார்பில் இலவச இருதய ஆன்ஜியோகிராம் சேவை

திருச்சி புத்தூர் சுந்தரம் மருத்துவமனையின் பிரத்யேக இருதய சிகிச்சை பிரிவின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. 

8 நாட்கள் நடந்த இம்முகாமில் 173 பேர் கலந்து கொண்டனர். இம்முகாம் இருதய நிபுணர் Dr.விமல்ராஜ் போகன சண்முகம் மற்றும் அவர்களது மருத்துவ குழுவினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட 173 பேருக்கும் இரத்த பரிசோதனை, ECS, ECHO மற்றும் TMT பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட்டு இருதய ஆன்ஜியோக்ராம் சிகிச்சை மேற்கொள்ள இருந்த 10 நபர்களுக்கும் ரூ.15,000 மதிப்புள்ள இருதய ஆன்ஜியோக்ராம் பரிசோதனை சுந்தரம் மருத்துவமனையின் அறக்கட்டளை மூலம் கட்டணமின்றி இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision