திருச்சி மாநகரில் போதை பொருள்களை விற்பனை செய்த நபர் கைது

திருச்சி மாநகரில் போதை பொருள்களை விற்பனை செய்த நபர் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையராக G.கார்த்திகேயன், பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் போதை பொருட்களான கஞ்சா, குட்கா விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி இன்று (20.12.22)-ந் தேதி திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருள்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட ரகசிய தகவலின்பேரில் ஹரிஹரன் (23) என்பவரை கைது செய்து, விசாரணை செய்ததில் இளைஞர்களை போதையில் ஆழ்த்தக் கூடிய LSD- Lysergic Acid Diethylamide அட்டைகள் மற்றும் Methamphetamine போதை மருந்துகளை வெளியூரிலிருந்து கொரியர் மூலம் வரவழைத்து இளைஞர்களிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

மேலும் மேற்படி எதிரியிடமிருந்து 38 LSD- Lysergic Acid Diethylamide அட்டைகளும் மற்றும் ஒரு கிராம் அளவுள்ள Methamphetamine ஆகிய போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டு எதிரி ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹரிஹரனை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்றவைகளால் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanOll