முதலமைச்சர் திருச்சி வருகை - முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

முதலமைச்சர் திருச்சி வருகை - முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள (29.12.2022) அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தர உள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர்கள் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யா மொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன் வண்ணை அரங்கநாதன் சபியூல்லா

அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் மாவட்டக் கழகப் பொருளாளர் குணசேகரன் துணை மேயர் திவ்யாதனக்கோடி கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா பகுதிச் செயலாளர்கள் தர்மராஜ் நீலமேகம் மணிவேல் விஜயகுமார் மோகன் ராஜ்முகமது சிவா பாபு, ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO