தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. 

இம்நாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான் மாநிலச் செயலாளர் சபீர் அலி மற்றும் மாவட்ட தலைவர் குலாம்தஸ்தாஹீர் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான இஸ்லாமியர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அப்துல் கரீம்

இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வையும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது.

நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இளைய சமுதயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றத்தில் தர்கா மற்றும் கோவில் விவகாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட, சங்பரிவார் அமைப்புகள் நல்லிணக்கத்தோ வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஹிந்து முஸ்லிம் மக்களிடையே மத மோதலையும் வெறுப்பையும் உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தை அயோதியாக மாற்றுவோம் என்பது வார்த்தை தேவையற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் நீதிபதி இளந்திரையன் திருப்பன்றம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை இது தமிழகத்தில் நல்லதல்ல, மக்களின் நல்லிணக்கத்தை கெடுக்கும் என்று கூறியுள்ளார் அனுமதி மறுத்துள்ளார்.

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, பேரிடர் காலங்களிலும் முறையான நிவாரணம் தருவதில்லை. மத்திய அரசு நாங்கள் சொல்லும் கல்வித் திட்டத்தை கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் நிதி வழங்க மாட்டேன் என கூறுகின்றனர்.

மத்திய அரசு கல்வி உரிமையை பறிக்கும் போக்க வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொள்ளப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாரல் விற்பதை கண்டித்த வாலிபர் அவரது நண்பர் படுகொலை 

செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு, காவல்துறையினர் கடுமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திஇஸ்லாமியர் எவ்வளவு என்று கண்டறிந்து அதற்கான இட ஒலிக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. முதல் படியா 5சவிதம் இதை ஒதுக்கீடு தரட்டும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்  என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision